தபால் நிலையம் மற்றும் பல அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு
ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு
நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள
நிலையில்,
மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கும் நடைமுறைகளைத் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தபால் நிலையம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் பிரோவிடண்ட் ஃபண்ட் ஆகியவற்றில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...