'தமிழக
அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே,
அரசுடன் சமரசம் செய்து கொள்வதா;
மீண்டும் போராட்டத்தை தொடருவதா என, முடிவெடுக்கப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
மீண்டும் போராட்டத்தை தொடருவதா என, முடிவெடுக்கப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அதிருப்தி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, செப்டம்பர் மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது. உயர்நீதிமன்றம் தலையிட்டு, போராட்டத்தை நிறுத்தியது. ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, 2016, ஜன., முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடையாது என, தமிழக நிதித்துறை அறிவித்தது. அதனால், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முரண்பாடு : ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என, பல சங்கங்களும், முதல்வரிடம், மனு அளித்துள்ளன. ஜாக்டோ - ஜியோ அமைப்பின், அவசர கூட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில், நிலுவை தொகையை தர மறுப்பது மற்றும் ஆறாவது ஊதியக்குழு முதல் தொடரும் ஊதிய முரண்பாடுகள் தொடர்வது குறித்து, ஜாக்டோ - ஜியோ முறையிட உள்ளது.'இந்த வழக்கில், அரசு, என்ன விளக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கை அமையும்; நிலுவைத் தொகை தர மறுத்தால், மீண்டும் போராட்டம் என்ற நிலையை எடுக்க வேண்டி வரும்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது.
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
போராட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவை தொிவிக்கின்றேன். நானும் 2013 ல் TET தோ்வில் தோ்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பணி கிடைக்காமல் உள்ளேன்
ReplyDelete