ஆடிட்டர்
ஆவது எப்படி..? விளக்குகிறார்: 2016 சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில்
முதலிடம் பிடித்த தமிழக மாணவர் நாமக்கல் ஸ்ரீ ராம் அவர்கள்
நண்பர்களுக்கு வணக்கம்..
குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.ஆனால் மற்றவர்கள்
கற்றுக்கொடுப்பதை விரும்புவதில்லை- இது உளவியலாளர்களின்
கருத்து.விருப்பமில்லாத குழந்தைகளை படிப்பில் ஈடுபாட்டை கொண்டு வரவே நான்
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பாடங்கள் நடத்தி வருகிறேன்.
அப்படி என் மாணவர்களுக்காக தயாரித்த வீடியோக்களை தொகுப்பாக்கி “வெற்றிக்கொடி கட்டு” +2 வணிகவியல் பாட வீடியோ மெட்டிரியல் என்ற
பெயரில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன் பெற வேண்டும் என்ற
எண்ணத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவசமாக டிவிடி கேசட்டாக
வழங்கினேன். மாணவர்,ஆசிரியர் மத்தியில் நல்ல வரவேற்பும், நல்ல தேர்ச்சி
விகிதமும், அதிக மதிப்பெண்களும் பெற்றதாக நண்பர்கள் தெரிவித்து
வருகிறார்கள்.
பாடக்கருத்துக்களைத் தாண்டி அந்த டிவிடி மெட்டிரியலில் பல அம்சங்களை தந்திருந்தேன்.அதில் ஒரு பகுதிதான் “ஆடிட்டர்
ஆவது எப்படி..?” 2016 சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த
தமிழக மாணவர் நாமக்கல் ஸ்ரீ ராம் அவர்களுடனான உரையாடலையும் தந்திருந்தேன். அதனை நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பதிவாக பகிர்கிறேன்.
அரசு பள்ளி தம்பி,தங்கைகளுக்காக என்று நான் கேட்டவுடனே
தயக்கமின்றி நேரம் ஒதுக்கி, சி,ஏ தேர்வு குறித்த அனைத்து விபரங்களையும்
வழங்கிய ஆடிட்டர் சி.ஏ ஸ்ரீ ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை
உரித்தாக்குகிறேன்.
வளர்ந்த பிறகு மற்றவர்களையும் வளரச்செய்ய வேண்டும் என்கிற நல்லுள்ளம் கொண்ட அவர் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்.
- நட்புடன்
ப.கார்த்திகேயன்,
முதுகலை வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,கரூர் மாவட்டம்.
ஆடிட்டர் ஆவது எப்படி? - விளக்குகிறார் ஸ்ரீ ராம்
PART - 1
https://youtu.be/ecNVfQwAHHg
https://youtu.be/ecNVfQwAHHg
PART - 2
https://youtu.be/8ucmlwkWsV8
https://youtu.be/8ucmlwkWsV8
PART - 3
https://youtu.be/OwpCT9s3xpg
https://youtu.be/OwpCT9s3xpg
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...