16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 73
ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளதாகவும், இதன் மூலம் 69 வாக்குச்சாவடிகள்
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
பட்டியல் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை
மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன், அ.தி.மு.க. (அம்மா, புரட்சித்தலைவி
அம்மா) சார்பில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, தி.மு.க. சார்பில் சேப்பாக்கம்
பகுதி செயலாளர் மதன் மோகன், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள்
விசாகன் ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இந்திய
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16
சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2018–ம் தேதியை தகுதி
ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2018–ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம்
மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி
மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது
பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை சரிபார்த்து
கொள்ளலாம்.
கடந்த
5.1.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின்
எண்ணிக்கை 19 லட்சத்து 72 ஆயிரத்து 641 ஆகும். பெண் வாக்காளர்களின்
எண்ணிக்கை 20 லட்சத்து 13 ஆயிரத்து 768 ஆகும். இதர வாக்காளர்களின்
எண்ணிக்கை 959 ஆகும். சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 39
லட்சத்து 87 ஆயிரத்து 359 ஆகும்.
நடைபெற்று முடிந்த தொடர்திருத்தத்தில்
சென்னை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 81 ஆண் வாக்காளர்கள் மற்றும் 16 ஆயிரத்து
473 பெண் வாக்காளர்கள் மற்றும் 19 இதர வாக்காளர்களின் பெயர்கள்
சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்கள், 8 ஆயிரத்து 2
பெண் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 73
ஆயிரத்து 703 ஆகும். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1
லட்சத்து 89 ஆயிரத்து 102 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற
தொகுதியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்களும் உள்ளனர்.
ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர்
பட்டியலில் இடம் பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டு,
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
ReplyDeleteநடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் உங்கள் பணிவாய்ப்பு கேள்விகுறியாகும் என கருதுபவர்களே!
அரசாணை 71 வெயிட்டேஜ் முறை தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா?
உடனே அழையுங்கள்.
Cell No : 8012776142
9500959482
99426 61187
90472 94417