இனி வரும்காலங்களில் தீபாவளி வந்தால் “பட்டாசு வாங்கியாச்சா? துணி
வாங்கியாச்சா?” எனக் கேட்க மாட்டார்கள். “மொபைல் என்ன வாங்கின? பவர்பேங்க்
என்ன மாடல்?” என்றுதான் கேட்பார்களோ என நினைக்க வைக்கிறது ஆன்லைன் சேல்ஸ்.
தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஆஃபர்களை
அள்ளிதந்திருக்கிறார்கள். உங்களுக்கு மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால்,
இந்த ஆஃபர்களை ஒரு முறை பார்த்திடுங்க.
ஆண்ட்ராய்டு:
12,999 இருந்த ரெட்மி நோட் 4, 64GB (5.5-inch 1080p IPS LCD டிஸ்ப்ளே,
ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராஸசர்) இப்போது 2000 குறைந்து 10,999 மட்டுமே.
10,000 இருந்த லெனோவோ கே8 இப்போது 8,999 மட்டுமே ( 5.5 இன்ச் IPS LCD, 2.3 GHz மீடியாடெக் ஹீலியோ X23 டெக்கா கோர் ப்ராசஸர்
17,999 இருந்த Lenovo Z2 Plus 32GB-ன் புதிய விலை 8,999 மட்டுமே.
6,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட மோட்டோ சி ப்ளஸ் இப்போது 5,999 மட்டுமே.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பேமெண்ட் வாலட் ஆன “ஃபோன்பே” மூலம் வாங்கினால் 20% கேஷ்பேக் ஆஃபரும் உண்டு.
இவைத் தவிர HDFC கார்டு வைத்திருந்தால், 10% கூடுதல் (அதிகபட்சம் 1750) தள்ளுபடி உண்டு.
ஆப்பிள் மொபைல்கள்:
புதிதாய் வெளியாகியிருக்கும் ஆப்பிள் 8க்கே நல்ல ஆஃபர் தந்திருக்கிறது
ஃப்ளிப்கார்ட். 64000 ரூபாய் மொபைல் தள்ளுபடிக்குப் பிறகு 59,999. பழைய
ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் தந்தால் கூடுதல் 20,000 தள்ளுபடி.
4.7 இன்ச் 750 x 1334 திரை.
Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
2 ஜிபி ரேம் மற்றும் 64/256 ஜிபி இன்டர்னல் மெமரி.
12மெகாபிக்சல் பின்புற கேமரா.
7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC
இதனுடன் தரப்படும் இன்னும் ஆஃபர்தான் ஹைலைட். அடுத்த ஒரு வருடத்தில் இந்த
மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்தால் குறைந்தது 50% மதிப்பில் ஃப்ளிப்கார்டே
திரும்ப வாங்கிக்கொள்ளும். இதற்காக இப்போது 99ரூபாய் செலுத்தினால் போதும்.
ஆப்பிள் 8+ 67,000க்கு கிடைக்கும். இதன் MRP 73000
5.5 இன்ச் 1080 x 1920 திரை.
Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
3 ஜிபி ரேம் மற்றும் 64/256 ஜிபி இன்டர்னல் மெமரி.
12+12 மெகா பிக்சல் பின்புற கேமரா. OIS மற்றும் 2x optical zoom வசதியுடன்.
7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC
அமேசான் ஆஃபர்கள்:
ஆண்ட்ராய்டு:
10,999 ரூபாய் இருந்த ரெட்மி 4 32 ஜி.பி 9,499க்கே கிடைக்கிறது.
22,999 ரூபாய் இருந்த Asus Zenfone 3 32GB 10,999க்கே கிடைக்கிறது.
சமீபத்தில் வெளியான நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கும் 2000 ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி உண்டு. இதன் விலை இப்போது 14,999.
கூடுதலாக SBI கார்டுகளுக்கு 10% தள்ளுபடி உண்டு.
ஆப்பிள் மொபைல்கள்:
ஐபோன்8க்கு ஃப்ளிப்கார்ட் என்றால் ஐபோன் 7 வாங்க அமேசான்தான் சரியான இடம்.
49000 விலையிருந்த ஐபோன்7 32 ஜி.பி இப்போது 37,999 மட்டுமே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...