ராணிப்பேட்டை அருகே உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பைக்கில் வந்த மர்ம
நபர்கள் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்து
தப்பியோடினர்.
ஆற்காட்டை
அடுத்த கும்மடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாந்தி
(46). இவர், வாலாஜாபேட்டையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி
வருகிறார்.
இந்நிலையில், இவரது அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வரும் ஆற்காடு
அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலுவின் (45) பைக்கில்
சாந்தி வியாழக்கிழமை மாலை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம
நபர்கள் சாந்தியின் கையில் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து சாந்தி ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், பையில் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி, ஆதார் அட்டை
உள்ளிட்டவை வைத்திருந்ததாகத் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete