சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவேயின் மற்றொரு அங்கமான ஹானர் நிறுவனத்தில் நான்கு கேமரா வசதி கொண்ட `ஹானர் 9-ஐ' என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
IANS ஊடகத்தில் அக்டோபர் 4 அன்று வெளியான தகவலின்படி, சீனாவில் `மைமங் 6' என்று வெளியான போனின் இந்திய வெளியீடே இந்த `ஹானர் 9-ஐ' ஆகும். மேலும் இந்தப் போனில் முன்பக்கம் இரண்டு கேமராவும், பின்பக்கம் இரண்டு கேமராவும் இடம்பெற்றிருக்கும். இது பெசல் லெஸ் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ப்ரெஸ்டிஜ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்தப் போனை அக்டோபர் 14 முதல் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் 19,999/- ரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளலாம். 5.9-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.36GHz கிரின் 659 பிராசசர், 4GB Ram, 64GB Rom, ஆண்ட்ராய்ட் 7.0 நக்கட் இதன் சிறப்பம்சங்களாகும். இதில் பிங்கர் பிரிண்ட் வசதியும் உள்ளது. முன்புற செல்ஃபி கேமரா 13MP+2MP மற்றும் பின் புற கேமரா 16MP+2MP கொண்டதாக இருக்கும். இதன் பேட்டரித் திறன் 3340 mAh வசதி கொண்டதால், இதன் செயல்பாடு நீண்ட நேரம் நீடித்து இருக்கும்.
சீனாவின் முன்னணி நிறுவனமான ஹூவே, 1997ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் தயாரித்து வருகிறது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பைக் கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்மார்ட்போன், டேப்லட் மட்டுமல்லாமல் தற்போது ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...