அரசு
மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சம் மாணவர்களுக்கு,
பள்ளிக்கல்வித் துறையால், விரைவில், மருத்துவ விபத்து காப்பீடு வழங்கப்பட
உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்,
விபத்து மற்றும் இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது, உரிய
சிகிச்சை கிடைப்பது சிக்கலாக உள்ளது. பலர், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர்
என்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.
எனவே, மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை, இலவசமாக மருத்துவ விபத்து காப்பீடு வழங்கவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, விபத்து காப்பீடு பதிவு செய்யப்பட உள்ளது.இதற்கான பணிகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் துவங்கி உள்ளது. இரு மாதங்களில், விபத்து காப்பீடுக்கான தனியார் நிறுவனத்தை இறுதி செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். -
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...