ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்
பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு
நடைமுறைப்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போன்று, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தால் அவர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 2.57 பெருக்கல் காரணியைக் கொண்டு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அளிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...