புதுடில்லி: குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுப்பது மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறப்பதை தடுப்பதில், இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஐ.நா., கூறியுள்ளது.
ஐ.நா., மக்கள்தொகை நடவடிக்கை நிதியம், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறக்கும் விகிதம், ஒரு லட்சம் பேருக்கு, 174 ஆக உள்ளது. இதில், உலக சராசரி விகிதம், 216 ஆக உள்ளது. வளர்ந்த நாடுகளில், இந்த விகிதம், 12 ஆக உள்ளது. அதை ஒப்பிடுகையில், இந்தியா, மிகவும் பின்தங்கி உள்ளது.
இந்தியாவில், 27 சதவீத குழந்தைகள், 18 வயது பூர்த்தி ஆகும் முன், திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இதை தடுப்பதில், இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேசத்தில், 18 வயதாகும் முன், 59 சதவீத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. நேபாளத்தில், இது, 37 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...