ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இவற்றை பெற, ரேஷன் கார்டு அவசியம். காகித வடிவிலான ரேஷன் கார்டுக்கு
பதில், ஏப்., முதல், கையடக்க வடிவில், பிளாஸ்டிக், 'ஸ்மார்ட்' கார்டு
வழங்கப் படுகிறது. அதற்கு, உணவு துறை, பல முறை வலியுறுத்தியும், பலர்
சரியான விபரங்கள் தராமல் உள்ளனர்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டு
பணி தாமதமாகும் என்பதால், 2016 இறுதியில், ஏற்கனவே இருந்த பழைய கார்டின் ஆயுள் காலத்தை, 2017 டிச., வரை நீட்டித்து, உள் தாள் ஒட்டப்பட்டது. ஸ்மார்ட் கார்டு தர, மக்களிடம் இருந்து வாங்கிய, 'ஆதார்' அட்டையில், புகைப்படம், பெயர் விபரங்கள் சரியாக இல்லை. அவற்றை சரியாக தரும்படி,தொடர்ந்து கேட்க பட்டு வருகிறது. ஆனால், பலரும் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது, ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களுக்கு, அதன் அடிப்படையிலும், வாங்காதவர்களுக்கு, பழைய கார்டின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பழைய கார்டின் செல்லத்தக்க காலம், டிசம்பருடன் முடிகிறது. இதுவரை, 1.70 கோடி ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், 23 லட்சம் கார்டுதாரர்கள், சரியான விபரங்கள் தராததால், அவர்களின் கார்டுகள் அச்சிடப்படவில்லை. அதில், 20 லட்சம் பேர், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த, 20 லட்சம் நபர்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள். அவர்கள், சென்னையிலும், சொந்த ஊரிலும், தனித்தனி
ரேஷன் கார்டு வாங்கி உள்ளனர். ஆதார் விபரம் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு தருவதால், அவர்கள் அதை, சொந்த ஊரில் வாங்கி விட்ட னர். தற்போதைய கெடுபிடிகளால், சென்னை யில், இரண்டாவது கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதாக தெரிகிறது.டிச., மாதத்திற்கு பின், உள்தாள் ஒட்டப்படாது.
இதனால், ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களுக்கு தான் பொருட்கள் கிடைக்கும். எனவே, இது வரை, சரியான விபரங்களை தராதவர்களுக் கும், ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களுக்கும், ஜனவரி முதல் ரேஷன் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...