Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2009 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய முதல்வர் தனிப்பிரிவில் மனு!!!

மதிப்பிற்குரிய ஐயா !!! வணக்கம்.
நான் தற்பொழுது ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.



  தமிழகத்தில் 2009-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட 22000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவால் ஏற்பட்ட பெரும் ஊதிய முரண்பாடு, ஊதிய இழப்பு இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்தப் பிரச்சனையால் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்து, அதன் பிறகு D.T.Ed எனப்படும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பினை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய Pay Band 2 - 9300-34800 + 4200 க்கு பதிலாக, 10-ம் வகுப்பு தகுதிக்கான ஊதியம் Pay Band 1 - 5200-20200 + 2800 மட்டுமே  வழங்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் மாத ஊதியம் கூட 2009க்கு பின் நியமனம் செய்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப் படவில்லை என்பது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை 2009க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட  இடைநிலை ஆசிரியர்களின் பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதோடு,  சம வேலைக்குச் சம ஊதியம் என்ற சமூக நீதியும் மறுக்கப்படும் அவல நிலையையும் இவ்வூதிய முரண்பாடு ஏற்படுத்தி உள்ளது. ஆதலால், வரும் 7வது ஊதிய குழுவிலாவது தயவுகூர்ந்து எங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிப்ளமோ தகுதிக்கு உரிய Pay Band 2 - 9300-34800 + 4200 என்ற 6-வது ஊதியக்குழுவின் ஊதியக்கட்டின் அடிப்படையில், புதிய 7-வது ஊதியக் குழுவின் ஊதியத்தை எங்களுக்குத் திருத்தியமைத்து வழங்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்து உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive