பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை,
பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
குழப்பம் : பிளஸ் 1 பொது தேர்வில், முக்கிய பாடங்களுக்கு, 20
மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது
குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதனால், செய்முறை தேர்வு உண்டா; அதன் விதிகள் என்னவென்று, மாணவர்களும்,
பள்ளிகளும் குழப்பம் அடைந்தன.
இது குறித்து, நமது நாளிதழில், இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டை யன் உத்தரவின்படி, செய்முறை
தேர்வுக்கான விதிகள் உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு,
செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை தயாரித்து
வருகிறது. தேர்வு அட்டவணைக்கு முன், செய்முறை தேர்வுடன் இணைந்த,
அகமதிப்பீட்டு முறையின் விதிகளை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி,
பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.
10 மதிப்பெண்கள் : அதில், செய்முறை தேர்வில், 10 மதிப்பெண்கள்,
அகமதிப்பீடாக வழங்க, நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன. அதை
பின்பற்றி மதிப்பெண் வழங்குவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க
வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை, சுற்றறிக்கையில்
தேர்வுத்துறை இயக்குனர் குறிப்பிடவில்லை. விரைவில் தேர்வு அறிவிப்பு வரும்
என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...