தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த,
'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை
விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 'டிஜிட்டல்'
தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்'
இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா
தெரிவித்திருந்தார்.
தற்போது, அதற்கான உரிமம் கிடைத்து விட்டதால், செட் - டாப் பாக்ஸ் வினியோகத்தை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் இருந்து, ஒரு பாக்சுக்கு, 175 ரூபாய் வசூல் செய்ய, ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள், அதிக தொகைக்கு விற்பதாக, புகார் கூறப்படுகிறது.

சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்
கூறும்போது, 'எங்கள் ஆப்பரேட்டர், 1,200 ரூபாய் கேட்கிறார்; என்ன
செய்வதென்றே தெரியவில்லை' என்றார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும்,
500 - 800 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்
Complaints Pana phone number add panuko
ReplyDelete