கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி
தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து
தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை
தாக்கல் செய்து உள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு
ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட
பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள்
சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும்
எளிதாக்கி வருகிறது.இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி,
கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு
தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து
ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை
இயக்குனர்கள் நாகராஜ
முருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான்,
குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபாத், நரேஷ் - ஆந்திரா, பாஸ்கரசேதுபதி
- அகமதாபாத் மற்றும் கேரளாவில் கொச்சி உட்பட 10 இடங்களில் ஆய்வு
நடத்தினர்.அங்கு தனியார் பயிற்சி மையங்கள் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., உட்பட
நுழைவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டி தேர்வுகளுக்கு
மாணவர்களுக்கு எந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. எவ்வகை
பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்த முழு தகவல்
சேகரிக்கப்பட்டன.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:தமிழகத்தில் தற்போதுஉள்ள பாடத்திட்டம் தரமானவை தான். ஆனால் நீட்
தேர்வு அமலுக்கு பின் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத்
திட்டங்களையும் தாண்டி, வெளி நாடுகள், பிற மாநிலங்களில் எவ்வகை பாடத்
திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதையும் அதில் உள்ள சிறந்த பகுதிகளையும்
புதிய பாடத்திட்டத்தில் இணைக்க பாடத் திட்டக் குழு நடவடிக்கை எடுத்து
வருகிறது.இதன்படி பத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படும் தனியார்
கோச்சிங் மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை குறித்த தகவல்
திரட்டப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் பிளஸ் 1
படிக்கும் போதே நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐ.ஐ.டி.,
ஜே.இ.இ., படிப்புகளுக்கான நுழைவு
தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறை குறித்தும் தகவல் பெறப்பட்டது.
இதுதொடர்பாக கல்வி செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் குழுவுடன்
அக்.,2ல் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு ஆலோசனை நடத்துகிறார்,
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...