10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மதிப்பெண் கணக்கீட்டு முறையை
நிறுத்தும்படி, மாநில கல்வி வாரியங்களையும், சி.பி.எஸ்.இ.,யையும், மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
இது பற்றி பள்ளி கல்வித்துறை செயலர், அனில் ஸ்வரூப் கூறியதாவது:மாநில கல்வி
வாரியங்களும், சி.பி.எஸ்.இ.,யும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில்,
மதிப்பெண் கணக்கீட்டு முறையை செயல்படுத்தி வருகின்றன.அடுத்த கல்வியாண்டு
முதல், மதிப்பெண் கணக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் என, மனித வள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 'கிரேடு' முறை தான்
சிறப்பாக இருக்கும்.
ஏனெனில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக, மதிப்பெண்களை கூடுதலாக
வழங்கும் முறை, பல மாநிலங்களில் நீடிக்கிறது. இதில் அதிகளவில் முறைகேடுகள்
நடக்கின்றன.நாடு முழுவதும், ௨௦௧௮ முதல், பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண்
வழங்குவதில், பொதுவான முறையை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய அரசு
விரும்புகிறது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...