மேஷம்
உங்கள்
செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு
பேசுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை
தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத
இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். சிலர் உங்களிடம்
நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அவசர
முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
பிள்ளைகளின்
பாசம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில்
ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள்
பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக்
கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில்
வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை
ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன்
மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பழைய
சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை
சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த
பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரையும் தூக்கி எறிந்து
பேசாதீர்கள். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில்
தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தினரை
அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
சகோதர வகையில் மனவருத்தம் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும்.
வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுகப்
பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...