மேஷம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை
சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி
பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை
கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச்
சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு
கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
சவால்கள்,
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள்
கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டம்
தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக்
கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து
நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
ராசிக்குள்
சந்திரன் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள்.
குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வரக்கூடும். தர்மசங்கடமான
சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். உதவி செய்வதாக வாக்குக்
கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி
எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய
வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
எளிதில்
முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி
வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து
விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து
லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
உங்கள்
செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு
மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.
உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
மாறுபட்ட
யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.
வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில்
அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக
நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை குறைக்
கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில்
ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில்
அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...