மேஷம்
பால்ய
நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால்
அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்
பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க
வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு
டென்ஷன் இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.
சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.
வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன்
அளவாகப் பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
எடுத்த
வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப்
பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக
வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
எதையும்
சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள்
விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு.
உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால்
மதிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
சந்திராஷ்டமம்
தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில்
உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து
வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.
உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
சவாலான
வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள்
உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி
வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி
உங்களை மதிப்பர்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு
கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று
நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு
வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...