மேஷம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள்
கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ரிஷபம்
இரவு
மணி 7.16 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான காரியங்களையெல்லாம்
கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக்
கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில்
பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மிதுனம்
வேலைச்சுமையால்
உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும்.
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். எதிர்மறை எண்ணங்கள்
தலைத்தூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.
உத்யோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். இரவு மணி 7. 16 முதல் ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவை.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடகம்
உங்களின்
கடின உழைப்பால் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நீண்ட காலமாக பார்க்க
நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். சிலர்
உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்
ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சிம்மம்
மற்றவர்களின்
மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம்
முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால்
பயனடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கன்னி
குடும்பத்தில்
கலகலப்பான சூழ்நிலை உருவாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம்
விரிவடையும். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன
வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
துலாம்
இன்றும்
இரவு மணி 7.16 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய்
சண்டையில் முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக்
கொடுத்துப் போங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். முன்கோபத்தால்
பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப்
பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
விருச்சிகம்
உங்களிடம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மனைவியுடன் ஆரோக்யமான விவாதங்கள்
வந்துப் போகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப் போன
விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் விசுவாசமாக
நடந்துக் கொள்வார்கள். இரவு மணி 7.16 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்
எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
தனுசு
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ்,
கௌரவம் உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
புதிய
திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு
களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை
மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கும்பம்
எதிர்பார்த்த
வேலைகள் தாமதமானாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு, கை, கால் வலி
வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும்.
உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
மீனம்
குடும்பத்தினரை
கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பேச்சில்
அனுபவ அறிவு வெளிப்படும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக்
கொள்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...