மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரம்
செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களிடம்
நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக்
காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
கணவன்
- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை
குறைக்கப் பாருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களுடன்
மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில்
வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை
விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து
யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
சின்ன
சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பாராத
இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
கடந்த
இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட
நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து
முடிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து
முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து விலகும். உங்களைப்
பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். பண விஷயத்தில்
கறாராக இருங்கள். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். உத்யோகத்தில்
அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில்
புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு
வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புது நட்பு மலரும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய
வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம்
உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம்
உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
சவால்கள்,
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்
மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...