புளூவேல் எனும் மரண விளையாட்டில், மதுரை கல்லுாரி மாணவர் ஒருவர்
உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள்,
பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி எச்சரிக்கை செய்து வருகின்றன.
அதில், கூறியிருப்பதாவது: இணையதளம் மூலம், மாணவர்களால் விரும்பத்தகாத
விளையாட்டுகள், பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதனால் கடும் விளைவுகள்
ஏற்படுகின்றன. ஆகையால், உங்களின் பிள்ளைகள் அதிக நேரம், உங்களின்
கண்காணிப்பு இல்லாமல், தனிமையில், இணையதளம் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
தனிமையில் இருக்க விரும்பும் குழந்தைகளின் நடவடிக்கைகளை, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருங்கள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கு கண்டிப்பாக மொபைல் போன் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், சாதாரண போன்களை கொடுங்கள்; ஸ்மார்ட் போன்கள் வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...