ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு, ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை சைபர் தாக்குதல்களில் இருந்து தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் தங்களது சாதனங்களை ரூட் செய்திருப்பர். எனினும் ரூட் செய்யப்பட்ட சாதனங்கள் சைபர் தாக்குதல்களுக்கு மிக எளிமையாக இலக்காகும் என்பது பலரும் அறிந்திராத ஒன்றாகும். அந்த வகையில் ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதுகாக்க சில டிப்ஸ்...ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்தால் முழுமையான அட்மினிஸ்ட்ரேட்டர் அக்சஸ் கிடைத்திடும், எனினும் இவை தீங்கு விளைவிக்கும் செயலிகளுக்கு ஏதுவாகவும் பயன்படுத்த முடியும். இதனால் சூப்பர்சு (SuperSU) செயலியை இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனில் ரூட் அளவு அக்சஸ் கோரும் செயலிகளை காட்டிக் கொடுக்கும். இதனால் தீங்க விளைவிக்க நினைக்கும் செயலிகளை அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு செயலிகள் உங்களது சாதனத்தில் அனுமதி கோரும், அவ்வாறு அனுமதி கோரும் செயலிகள் கோரும் அனுமதியை சரிவர கண்காணிக்க F- Secure App Permission செயலி பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு சாதனத்தை பாதுகாக்க இந்த செயலி கட்டாயம் இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது
ஸ்மார்ட்போனில் நம்பகத்தன்மை அற்ற நெட்வொர்க்களில் பயன்படுத்தும் போது உங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைத்து நெட்வொர்க் பயன்பாடுகளையும் முடக்க முடியும். இதை செய்ய AfWall+ சிறப்பானதாக இருக்கும். இந்த செயலி உங்களது டேட்டா நெட்வொர்க்களை பயன்படுத்தும் செயலிகளின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும்.
ஆண்டிவைரஸ் செயலி:
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பதில் ஆண்டிவைரஸ் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த ஆண்டிவைரஸ் செயலிகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து ரூட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...