சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான,
முதற்கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில்,
முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவிகளில், 3,325 இடங்கள்
காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
சார்பில், ஜூலை, 2ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இதில், இரண்டு லட்சம்
பேர் பங்கேற்றனர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28 மற்றும்
29ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தேர்வானவர்கள் பட்டியல்
நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, trb.tn.nic.in என்ற இணையதளத்தில்,
தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...