இன்றைய யுகத்தில் ஸ்மார்ட் போன் என்பது மனிதனின் இரண்டற கலந்த ஒன்றாக
மாறிவிட்டது. இதனால் கையில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பது என்றது
இன்று மிக மிக அரிதான ஒன்றாகிவிட்டது. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்களின்
மோகமும், பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இது ஒருபுறம் இருந்தாலும்,
செல்போன் பயன்படுத்துபவர்களை ஒரு கனம் எரிச்சலையும், கோவத்தையும்
உண்டாக்குவது செல்போன் ‘ஹேங்’ ஆவது தான்.
இந்த பிரச்சினை ஆண்டிராய்டு போன்களில் சகஜமான ஒன்றுதான். ஏன் கம்ப்யூட்டர்கள் கூட ஒருசில நேரங்களில் ஹேங் ஆவது உண்டு. இருந்த போதிலும், நாம் அனைவரும் பல நேரங்களில் அவசர நிலையில் தான் இருப்போம்.
ஆனால் மோபைல் போன் நாம் சொல்லும் பேச்சை அவசர காலத்தில் கேட்காமல், சரியான நேரம் பார்த்து திடீரென ஹேங் ஆகி விடும். இதனால் கோபத்துக்கு உள்ளாகும் நாம் செல்போனை திட்டியதும் உண்டு, இன்னும் ஒருசிலர் தூக்கி வீசியவர்களும் நம்மில் இருக்க தான் செய்கிறார்கள். இப்படி ‘ஹேங்’ ஆகும் மொபைல்களை எப்படி பழையபடி வேமாக செயல்பட வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
செல்போனில் தேவையில்லாத ஆப்ஸ்கள் இருந்தால் அதை முதலில் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வாறு எந்த ஆப்களை நாம் அன் இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதில் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை போர்ஸ் ஸ்டாப் ( Force stop) கொடுக்க வேண்டும்.
2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேட்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்து கொள்வது முக்கியம். ஒருமுறைக்கு 2 முறை பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா என சோதித்து பார்த்து விட்டு ரீசெட் செய்திட வேண்டும். 3 நாளைக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள்.
ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து Cache, thumbnails ஆகியவற்றை க்ளன் செய்திட வேண்டும். மேலும் மொபைலில் முடிந்தவரை தேவையான செல்போன் எண்களை மட்டுமே வைத்து கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள். ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது 1ஜிபி ரேம் மற்றும் 1.2நிபிக்ஷ் பிராசகர் கொண்ட மொபைலை வாங்கவும். அங்கீகரிக்கப்பட்ட ஆப்களையே டவுன்லோடு செய்திட வேண்டும். எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களை படித்து முடித்தவுடன், தேவையற்றதை டெலீட் செய்யவும். ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்ய வேண்டாம். போன் மெமரியை பொறுத்தவரைக்கும் எப்போதும், கால் பங்கு காலியாகவே வைத்து இருக்க வேண்டும். மெயின் ஸ்க்ரீனில் முடிந்த வரையில் எந்த icon, shortcut -ம் வைக்க வேண்டாம்.
சில மொபைல்களில் மெமரி கார்டில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புண்டு. செல்போனில் வைரஸ் இருந்தாலும் ‘ஹேங்’ ஆக வாய்ப்புகள் அதிகம். இதற்கு காரணம் செல்போனில் உள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை என்பதே ஆகும். எனவே இதற்கு மாறாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதம் ஒருமுறை ஸ்கேன் செய்து பயன்படுத்தாலம். செல்போனில் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.
இதையெல்லாம் செய்தும் உங்களது செல்போன் தொடர்ந்து ‘ஹேங்க்’ ஆனால், அப்புறம் அப்படியே பழகி கொள்ள வேண்டும் இல்லையெனில் புதுசு வாங்கி கொள்வது நல்லது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...