ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்கள் போனில் உள்ள மெமரியை தேவையில்லாத சில விஷயங்களுக்காக செலவு செய்திருப்பார்கள். புகைப்படங்கள்,
வீடியோக்கள், பாடல்கள், ஃபைல்கள், செயலிகள் என பலவிதங்களில் போனில் சேமித்து வைப்பதால் ஸ்டோரேஜ் மிக வேகமாக காலியாகி அதனால் போன் மெதுவாக இயங்குவது அல்லது ஹேங் ஆவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தீர நீங்கள் ரெகுலராக சில விஷயங்களை கடைபிடிக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போமா! இந்த டூல்ஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள எவை எவை எவ்வளவு ஸ்டோரேஜ்களை எடுத்து கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த டூல்ஸ் அதை நீங்கள் விளக்கமாக தெரிந்து கொள்ள உதவும். அதன் பின்னர் அதிக ஸ்டோரேஜ் எடுத்து கொண்டவைகள் உண்மையிலேயே உங்களுக்கு தேவைதானா? என்பதை முடிவு செய்தால் உங்களது இண்டர்னல் ஸ்டோரேஜ் காப்பாற்றப்படும் கேமிரா செல்போன் வந்த பின்னர் நாம் ஒவ்வொருவரும் கேமிராமேனாகி விட்டோம். பார்ப்பதை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும், செல்பி எடுக்க வேண்டும் என்ற வழக்கம் தானாகவே வந்துவிட்டது. இந்த நிலையில் நாம் எடுத்த புகைப்படங்கள் 1MB இல் இருந்து 5MB வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதிக ஸ்டோரேஜ் காலியாகிவிடும். எனவே சைஸ் குறையாமல், தரம் குறையாமல் கம்ப்ரஸ் செய்ய டூல்ஸ் உள்ளது. அதன் மூலம் கம்ப்ரஸ் செய்தால் ஸ்டோரேஜ் மிச்சமாகும் ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த இதுவொரு எளிய வழி. நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் கொண்ட பைல்கலை அப்படியே கிளவுட் ஸ்டோரேஜுக்கு மாற்றிவிடுங்கள். தேவைப்படும்போது கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து எடுத்து பார்த்து கொள்ளலாம். கூகுள் பிளஸ் மூலம் இதை மிக எளிதாக செய்யலாம். அதேபோல் டிராப் பாக்ஸில் உங்கள் போனில் உள்ள புகைப்படம் உள்ளிட்ட பைல்களை பாதுகாத்து வைத்து கொள்ளலாம்,. இதன்மூலம் போன் ஸ்டோரேஜ் அதிகளவு மிச்சப்படும் ஆண்ட்ராய்ட் போனில் அடிக்கடி ஜங்க் ஃபைல்கள் மற்றும் கேச்சி ஃபைல்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். எனவே இந்த ஃபைல்களை ரெகுலராக சுத்தம் செய்து கொண்டே வந்தால் ஸ்டோரேஜ் காலியாவதில் இருந்து தப்பிக்கலாம். C கிளினர் மூலம் ஜங்க் மற்று கேச்சி ஃபைல்களை எளிதில் டெலிட் செய்துவிடலாம். போனில் உள்ள தேவையில்லாத இந்த பைல்களை மொத்தமாகவோ, பகுதி பகுதியாகவோ க்ளின் செய்யும் வசதி இதில் உள்ளது. அறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).! ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப்-ஐ அதிகம் பயன்படுத்துவதால் அதில் பகிரப்படும் ஃபைல்களும் அதிகமாக இருக்கும். ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பினாலோ அல்லது பெற்று கொண்டாலோ அவை நம்முடைய போன் மெமரியில் இணைந்திருக்கும். இவற்றை அவ்வப்போது கவனித்து தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்துவிட்டால் போன் மெமரி காப்பாற்றப்படும் நாம் டவுன்லோடு ஆகும் ஒவ்வொரு செயலியும் நம்முடைய போன் ஸ்டோரேஜை அதிகளவு கிரகித்து கொள்ளும். எனவே டவுன்லோடு செய்து முடித்ததும், அதை போன் மெமரியில் இருந்து SD மெமரிக்கு மாற்றிவிட்டால் போன் மெமரி அப்படியே இருக்கும் ஒரு ஆர்வத்தில் பல செயலிகளை நாம் டவுன்லோடு செய்துவிடுவோம். ஆனால் அதன் பின்னர் நாம் அவற்றை உபயோகிப்பதே இல்லை. அல்லது எப்போதாவது உபயோகிப்போம். இவ்வாறான செயலிகளை தேடி கண்டுபிடித்து அன் - இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இதனால் தேவையில்லாமல் அடைத்து கொண்டிருக்கும் போன் மெமரி தப்பிக்கும் நாம் போன் வாங்கும்போதே ஒருசில செயலிகள் அதில் இருக்கும். அந்த செயலிகள் நமக்கு பெரும்பாலும் தேவைப்படாததாகவே இருக்கும். எனவே அதை அன் -இன்ஸ்டால் செய்தால் நமக்கு நிறைய ஸ்டோரேஜ் மிச்சப்படும். ஒருசில செயலிகளை அன் -இன்ஸ்டால் செய்ய அனுமதிக்காது. இருப்பினும் அதற்குரிய வழிமுறையை தேடி அன் -இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது ஆண்ட்ராய்டு போனில் ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மிக எளிதான ஒன்று. நாம் அவ்வப்போது தேவைக்கேற்ப ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது வழக்கமான ஒன்றே. ஆனால் அதன் தேவை முடிந்ததும் டெலிட் செய்துவிடுவது நல்லது. ஏனெனில் ஒரு சின்ன ஸ்க்ரீன் ஷாட் அதிக மெமரியை எடுத்து கொள்ளும். இந்த போல்டர்கள் பொதுவாக போனின் இண்டர்னல் ஸ்டோரேஜை அதிக அளவு சாப்பிடும் தன்மை உடையது. எனவே லாக் போல்டர்கள் உங்கள் போனில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்து இருந்தால் அதை உடனே டெலிட் செய்யுங்கள். இதனால் உங்கள் போனின் ஏராளமான மெமரி மிச்சப்படும்Revision Exam 2025
Latest Updates
Home »
» How to Maintain Your Android Device Internal Storage?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...