இந்தியாவில் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான்
சிறப்பு தள்ளுபடி விற்பனையை கடந்த சில நாட்களாக நடத்தி வரும் நிலையில்
சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளதாக சியோமி
தெரிவித்துள்ளது.
அந்தவகையில் விற்பனையின் முதல் இரண்டு நாட்களில் ஒவ்வொரு நி்மிடத்திற்கும் 300 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. அவ்வாறு ஒட்டுமொத்தமாக பத்து லட்சம் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 18 நாட்களில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சந்தையில் இவ்வாறான விற்பனை நடந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் சியோமி வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தது என சியோமி தெரிவித்துள்ளது. குறிப்பாக சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனையாகி வருகிறது. பிளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகியுள்ளது என சியோமி தெரிவித்துள்ளது.
அமேசான் தளத்தில் விற்பனையான ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களில் ஒன்பதில் எட்டு சாதனங்கள் சியோமி நிறுவனத்தை சேர்ந்தது என சியோமி தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்திய காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் முன்னணி பிரான்டாக சியோமி இருந்து வருகிறது.
பண்டிகை காலம் முழுக்க ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 மாடல்களின் இருப்பு அனைவருக்கும் கிடைப்பதை முன்கூட்டியே திட்டமிட்டோம். அனைத்து Mi ப்ரியர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்வதோடு தொடர்ந்து சிறப்பான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவோம் என சியோமி நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை பிரிவு தலைவர் ரகு ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது சியோமி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...