Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : JACTTO - GEO திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், 






செப்டம்பர் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும், மேலும் செப்டம்பர் 9-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது என ஜியோ அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணி ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் முக்கியமாக 3 கோரிக்கைகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளன. அதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியம் பெறுவோரை கால முறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுதான். இவற்றை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து அரசு தரப்பில் அக்கறை காட்டாமல் இருந்தனர். படிப்படியாக போராட்டங்களை தீவிரப்படுத்தி வந்த அந்த அமைப்பு கடந்த 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. அதில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அரசுப் பணிகள் முடங்கின.

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோவின் பிரதிநிதிகளை அழைத்து பேசாவிட்டால் செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதனால் கடந்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ பிரதிநிதிகளை அரசு அழைத்து பேசியது. அவர்கள் முன்வைந்த 3 கோரிக்கையை ஏற்பதில் உள்ள சிரமங்களை அரசு விவரமாகவும் பேசியது. பின்னர் முதல்வரிடம் பேசிவிட்டு முடிவு அறிவிக்கிறோம், 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி சென்னையில் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், 6ம் தேதி மாலைக்குள் சாதகமான பதிலையோ அல்லது முடிவையோ அறிவிக்காவிட்டால் திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கும் என்றும் ஜாக்டோ-ஜியோ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதை எதிர்பார்க்காத அரசு உடனடியாக அந்த அமைப்புடன் பேசி 6ம் தேதி ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தது. இதன்படி 27 சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகலில் ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.




18 Comments:

  1. Don't lose your confidence, keep going..

    ReplyDelete
  2. Ano sis true news Enna pathi amaipukal edupadadhunu solli irukkanga edhu unmai

    ReplyDelete
  3. Ano sis true news Enna pathi amaipukal edupadadhunu solli irukkanga edhu unmai

    ReplyDelete
    Replies
    1. Ithuku munadi rendu time chennai la porattam pana Jacto-Geo ku keezha seyalpadra ela sangamum nalaiku strike panranga sis.. Ithu confirm..

      Delete
  4. Ok sis ovoru channel ovoru madhiri telecast pannunga thats y I asked sis thank u sis

    ReplyDelete
  5. Ok sis ovoru channel ovoru madhiri telecast pannunga thats y I asked sis thank u sis

    ReplyDelete
  6. Sis now am also getting different news, they're sending contradictory statements..

    ReplyDelete
  7. அன்பார்ந்த தோழர்களே தமிழக முதலமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதால் நாளை( 07.09.17) முதல் திட்டமிட்டவாறு வேலைநிறுத்தம் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் மறியல் போராட்டம் நடைபெறும்.செய்தியை அனைவருக்கும் தெரிவித்து திரளாக பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம். தோழமையுடன் சா.டானியல், ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ-ஜியோ, சென்னை மாவட்டம்

    ReplyDelete
    Replies
    1. 📣📣📣📣📣📣📣📣📣📣📣
      *TESTF பொதுச்செயலாளர் அறிக்கை*
      📣📣📣📣📣📣📣📣📣📣📣
      👉 *ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஈரோட்டில் முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.*

      👉 *முதல்வர் கொடுத்த வாக்குறுதி(1)ஏழாவது ஊதியக்குழு ஊதியத்தை 30.9.2017 க்குள் வழங்கப்படும் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் 20%இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.(2)CPS திட்டத்தை ரத்து செய்வது பற்றி 30.11.2017 ல் ஸ்ரீதர் குழுவின் அறிக்கை படி செயல்படுத்தப்படும் என்று கூறினார்.*

      👉 *அறிக்கையின் முடிவு எப்படியிருந்தாலும் CPS திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்துவேன் என எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் கொடுங்கள் என கேட்டேன் அதற்கு முதல்வர் என் வாக்குறுதியை நம்புங்கள் என கூறினார்*

      👉 *தொகுப்பூதியம்,*
      *மதிப்பூதியம்* *ஆகியவற்றை ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்படும்பொழுது அவரவர் நிலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.என உறுதி கூறியுள்ளார்.*

      👉 *இந்த வாக்குறுதியை ஏற்று செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை ஜாக்டோவின் ஒருங்கினைப்பாளர் திரு.இளங்கோவன் 15.10.2017 வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.ஜியோ ஒருங்கினைப்பாளர் திரு.கணேசன் அவர்கள் 30.11.2017 வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார் ஜாக்டோ-ஜியோவில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளன.*

      👉 *அதன் அடிப்படையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காலச்சூழ்நிலை கருதி 30.11.2017 வரை தற்காலிகமாக முதல்வரின் உறுதிமொழியை ஏற்று,நம்பி போராட்டத்தை தற்சமயம் ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆகவே நாளை முதல் பள்ளிக்கு செல்லும்படி இயக்க உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.*

      *ந.ரெங்கராஜன்,*
      *பொதுச்செயலாளர்,*
      *தமிழ்நாடு* *தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

      📣📣📣📣📣📣📣📣📣📣📣

      Delete
    2. I got both the news shared within 10mins gap.. So we need to wait for authentic info ince again mam..

      Delete
  8. போராட்டம் தொடர *ஆதரவு* தெரிவித்த

    *உண்மையான உணர்வுள்ள ஆசிரியர் அமைப்புகள்*

    *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*

    *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*

    *தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி TNPTF*

    *தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் TNPGTA*

    *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு TNGTF.*

    *தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

    *தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கம்*

    *உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*

    *ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

    *இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் SSTA*

    *தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA*

    *அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்த 64 சங்கங்களும்* நாளைய தொடர் வேலை நிறுத்தப் போராட்ட களத்தில் உள்ளன..

    ReplyDelete
  9. *🅱REAKING NOW*

    *திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்*

    *திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்*

    *உயர்மட்ட குழுவின் நீண்ட ஆலோசனைக்கு பின் ஜாக்டோ ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு*

    ReplyDelete
  10. This is the latest news which I received just now sis..

    ReplyDelete
  11. Ok sis avargaladhu poratam vetri adayatum

    ReplyDelete
  12. Ok sis avargaladhu poratam vetri adayatum

    ReplyDelete
    Replies
    1. Exactly sis, namakum sethu than avanga porattam panranga.. Sure they'll suceed..

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive