காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம்
செய்து அதன் விவரங்களை உடனடியாக ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. ஹைகோர்ட் மதுரை கிளையின் கோரிக்கையை ஏற்று, அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளருடன் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலகட்டத்தை கணக்கில் கொண்டு, 10 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சம்பள பிடித்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...