சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.
நீதிமன்ற தடையை தாண்டி நாளுக்கு நாள் போராட்டக்கார்களின் எண்ணிக்கை கூடுவதற்கு காரணம் என்ன ?என்று அரசு வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார்.
அப்படியானால் பிரச்சினை வேறாக தெரிகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.
✍யாரோ ஒரு பொதுநல வழக்கறிஞர் ஒருவர் எழுந்து CPS இழப்பு குறித்து வாதிட்டார் என தகவல் பரவிவருகிறது.
✍அந்த மூத்த வழக்கறிஞர் திரு.M.S.ஞானசேகரன்
அவர்கள் தான். TATA சங்கம் சார்பில் CPS இரத்து செய்யக்கோரி நடத்தப்படும்
வழக்கின் எமது TATA வின் வழக்கறிஞர் ஆவார்.
( வழக்கு : 10375/2016 )
இதில் தலையிட்டு அரசு பல தகவல்களை மறைக்கிறது.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த cps பணத்தை உரிய முறையில் கையாளவில்லை.
பணம் எங்கே உள்ளது என்று தெரியவில்லை.
அரசு மத்திய PFRDA இல் செலுத்தவில்லை என எடுத்து கூறியுள்ளார்.
நீதிபதி:
தவறு நடந்திருந்தால் அரசை கேள்வி கேட்பேன்.
நான் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எதிரானவன் அல்ல.
இதுவரை ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை?
வழங்கப்பட்ட தொகை?
பணத்தை கையாண்ட விதம்?
குறித்து விவரம் தாக்கல் செய்யவும்.
என கூறியுள்ளார்.
வழக்கு திசை மாறியுள்ளது.
இதற்கு காரணம் மூத்த வழக்கறிஞர்
திரு.S.M.ஞானசேகரன் அவர்கள்தான் , இவர்தான் CPS க்கு எதிரான வழக்கு எண்
10375/ 2016 (TATA -வால் நடத்தப்படும்) 12/09/17அன்றைய விசாரணையின் போது
வாதாடியதால் நீதிமன்றம் ஒரு வார காலத்திற்கு CPS பற்றிய அனைத்து
விவரங்களையும், ஆவணங்களையும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்றுக்கூட
அரசு ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் விசாரணை நடந்தது
கொண்டிருக்கும்போது அரசு தரப்பில் தகவல்கள் மறைக்கப்பட்ட போது தானாக
முன்வந்து மாண்பமை நீதிபதிக்கு நமது CPS குறித்த இழப்பினை
புள்ளிவிவரங்களுடன் எடுத்துக்கூறியுள்ளார். இவ்வாறு நமது பாதிப்புகளை
நீதிமன்றம் அறியச்செய்யத மூத்தவழக்கறிஞர் மதிப்புமிகு S.M.ஞானசேகரன்
அவர்களை வணங்கி, வாழ்த்துகிறோம் . நமது இயக்க தோழர்கள் நமது மூத்த
வழக்கறிஞர் திரு. S.M.ஞானசேகரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்
வாழ்த்துக்களை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்நேரத்தில் நமது CPS வழக்கில்
நாம்மோடு கரம் இணைந்து போராடும் ஒருங்கிணைந்த பள்ளி ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் திரு. திருப்பதி அவர்களுக்கும் நமது நன்றிகளை
தெரிவிக்கிறோம்.
இப்படிக்கு
மாநில அமைப்பு
TATA.
செய்தி:-
பு.செல்வக்குமார்,
மாநிலசெய்தித்தொடர்பாளர்,
TATA.
மனமார்ந்த நன்றி திரு ஞானசேகரன் அவர்களே.வாழ்க ஆசிரியர் அரசு ஊழியர்கள் ஒற்றுமை.அனைவரின் உரிமைக்காகவும் போராடிய அன்பு நெஞ்சகளுக்கும் என் இதயபூர்வ வாழ்த்துக்கள்.
ReplyDeleteNallathe nadakattum.we need justice.entha Sangam enbathai Vida we need solution for CPS.
ReplyDeleteCps enbathu kaanal neer,
ReplyDeleteCps enbathu kaanal neer,
ReplyDeleteThank you sir
ReplyDeleteGod will show his presence in some way. Thank sir
ReplyDelete