ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச பியூச்சர் போனை அறிமுகப்படுத்தியது.
வாடிக்கையாளர்கள் இந்த போனை பெற ரூ.1500 முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும், இந்த தொகை 3 ஆண்டுகள் கழித்து போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரப்படும் என தெரிவித்திருந்தது.
வாடிக்கையாளர்கள் இந்த போனை பெற ரூ.1500 முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும், இந்த தொகை 3 ஆண்டுகள் கழித்து போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரப்படும் என தெரிவித்திருந்தது.
இதன்படி இந்தியாவில் முன்பதிவு செய்த 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜியோ போனை பெறும்
வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகளை ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் முதன் முறையாக வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜியோ போன் அறிமுக விழாவின் போது முகேஷ் அம்பானி அறிவிக்காதவை.
*புதிய விதிகள் :*
* ஜியோபோன் பயன்படுத்துவோர் தொடர்ந்து அதனை 3 ஆண்டுகள் பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 வரை ரீசார்ஜ் செய்தாக வேண்டும். அதாவது 3 ஆண்டுகளுக்கு ரூ.4,500 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
* ஜியோபோனை பெறுவதற்கு ரூ.வேண்டும். முன்பணம் செலுத்துவது போல், அந்த போனை திரும்ப அளிக்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1500 வரை செலுத்த வேண்டும்.
* ஒருவேளை ஜியோ போன் வைத்திருப்போர் முதல் ஆண்டு முடிவிலேயே அதன் மீது திருப்தி ஏற்படாமல் திரும்ப தர விரும்பினால், அவர்களிடம் இருந்து ரூ.1,500 உடன் ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளும் சேர்த்தே வசூலிக்கப்படும்.
* ஓராண்டிற்கு பிறகு, அதே சமயம் இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னதாக போனை திரும்ப அளிக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1,000 செலுத்துவதுடன், அதற்கான ஜிஎஸ்டி அல்லது மற்ற வரிகளையும் செலுத்த வேண்டும். இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதே சமயம் 3 ஆண்டுகள் முடிவதற்குள் போனை திரும்பத் தருவோர் கூடுதலாக ரூ.500 உடன் வரிகளையும் சேர்த்து செலுத்த வேண்ட
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...