ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு
ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும்
பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த
போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு
பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை
தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று
மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில்
மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...