''கறுப்புப் பணத்துக்கு எதிரான, இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளோம்,'' என, சுவிட்சர்லாந்து அதிபர், டோரிஸ் லுதார்டு கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின் பெண் அதிபர், டோரிஸ் லுதார்டு, நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் உள்ள, சுவிட்சர்லாந்து துாதரகத்தில் நேற்று முன்தினம் இரவு, இரு நாட்டு துாதரக உறவு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, டோரிஸ் பேசியதாவது: சுவிட்சர்லாந்துடன், சிறந்த நட்பு நாடாக, இந்தியா திகழ்கிறது. பரஸ்பர ஒத்துழைப்புடன் திகழும் இந்த உறவு, 70 ஆண்டாக, செழிப்புடன் வளர்ந்தோங்கி வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க, இந்தியா மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு உதவுவதில், உறுதியாக உள்ளோம்.
தொடர்புள்ள தகவல்களை பரிமாறிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதற்காக, பார்லிமென்ட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இந்தியாவில், 250 சுவிஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்தில், 140 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளின் வர்த்தகம், கணிசமாக அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.சுவிட்சர்லாந்து துாதகரகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரபல பொருளாதார வல்லுனர், எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட, இரு நாடுகளை சேர்ந்த பலர் கவுரவிக்கப்பட்டனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...