ஜாக்டோ-ஜியோ
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனை முடிந்த பின்னர், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசின் முடிவு குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், 7-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தினை மேற்கொள்வதற்கான களப்பணியினை முழு வீச்சில் மேற்கொள்வது என்றும், 7-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தினை மேற்கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
6.9.2017(நாளை)-க்குள் எங்களுடைய கோரிக்கைகளான ஊதியக்குழுவினை அமல் படுத்துதல், இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பான சாதகமான முடிவுகளையும் அதோடு மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்வது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்ற அறிவிப்பினை வழங்கினால் மட்டுமே, தொடர் வேலைநிறுத்தத்தினை கைவிடுவது என்று ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...