ஆயுதபூஜை
காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.
ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.
ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம்
சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை
மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள
பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த
ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள்
ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக
கூறப்படுகிறது.
ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத
பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை
போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள்
உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து
தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து
அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப்
பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
வழிபடும் முறை
நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும்
சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால்
அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை
வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். மறுநாள்
காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.
அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்
Thank you
ReplyDelete