சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில்
பங்கேற்கலாம்.
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டில், பி.டி.எஸ்.,
எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 681 இடங்கள் காலியாக உள்ளன. இந்த
ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, இடம் கிடைக்காத,
'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இன்று நடைபெறும்
கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். மேலும், மருத்துவ படிப்புகளுக்கு
விண்ணப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம். அவர்கள், இன்று பிற்பகல், 2:00
மணிக்குள், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும்
கவுன்சிலிங் வளாகத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர
வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...