வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள்
எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத்
தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தில்லியில் 51-ஆவது சர்வதேச எழுத்தறிவு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் வயது வந்தோர் பள்ளியில் கற்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் நடத்தப்படும் அரையாண்டு கற்றோர் மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்கின்றனர் என்பதும், அத்தகைய 6.66 பேர் தேசிய திறந்த நிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களில் 70
சதவீதம் பேர் பெண்களாவர்.
வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான். இவ்வாறு புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்களே 'சாக்ஷர் பாரத்' (எழுத்தறிவு இந்தியா), 'சாக்ஷம் பாரத்' (திறன்வாய்ந்த இந்தியா) ஆகிய எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அனைவரையும் பங்கேற்கச் செய்யும், துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தைக் கட்டமைப்பதை நோக்கிய பயணத்தில் எழுத்தறிவு முதல் அவசிய அடியாகத் திகழ்கிறது.
தொடக்கக் கல்விக்கு முந்தைய மற்றும் பள்ளிக் கல்வியை மேம்படுத்துதல், இதுவரை பள்ளிகளுக்கே செல்லாதவர்களுக்கும் கற்றல் வாய்ப்புகளை அளித்தல் உள்பட முழு எழுத்தறிவைச் சாதிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதுவரை எழுத்தறிவு பெறாதவர்களையும் அணுகி அவர்களையும் கற்றல் திட்டத்தில் இணைப்பதற்கு நாம் புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
இந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், அத்துறையின் இணையமைச்சர்களான உபேந்திர சிங் குஷ்வாஹா, சத்யபால் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...