அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இதுவரை,40 லட்சம் பேருக்குவழங்கப்பட்டுள்ளன.2016 - 17 கல்வியாண்டில், லேப் - டாப் கொள்முதலுக்கு, 'டெண்டர்' விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறைஅதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வியாண்டுக்கான லேப் - டாப்கள்,இப்போது தான் வரதுவங்கியுள்ளன.
அவற்றைகொடுத்து முடிப்பதற்கே, பல மாதம் ஆகிவிடும். வழக்கமாக, லேப் - டாப் கொள்முதல்செய்வதற்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில்,அது தொடர்பாக அரசாணைவெளியிடப்படும். அதன்பின், பல மாதங்கள் கழித்து, கொள்முதல் துவங்கும்.
இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...