அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான்,
24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து
தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பஸ் ஊழியருக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம்,
ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியரிடம் பிடித்தம் செய்த வருங்கால
வைப்பு நிதி, 2,200 கோடி ரூபாய்; பங்களிப்பு ஓய்வூதியம், 1,700 கோடி
ரூபாய்; பணிக்கொடை நிதி, 750 கோடி ரூபாய்; கூட்டுறவு நிறுவனங்களுக்காக
பிடித்தம் செய்த, 300 கோடி ரூபாய்; விடுப்பு சம்பளம், 300 கோடி ரூபாய், என,
5,250 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வரவில்லை. ஓய்வு பெற்றோருக்கான, 800
கோடி ரூபாய்; பேச்சுக்கு பின், நிர்வாகம் செலவழித்த தொகை, 600 கோடி ரூபாயை
வழங்க, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...