வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ
கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி.,
மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது
தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு
தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.
இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம்,
திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர்
மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார்.
அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.
கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய
அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம்
செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும்.
தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல்,
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த
மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...