தொந்தி இருப்பதால் ஆடைகள் இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும், அதை விடப் பெரிய பிரச்சனை அது உங்கள் உடல்நலத்திற்கும் தீங்கானது என்பதே.
இதுபோன்ற கொழுப்புதான் வகை -2 நீரிழிவுநோய்க்கும் இதய நோய்க்கும் முக்கியமான காரணமாக உள்ளது.தொந்திக் கொழுப்பைக் குறைத்து வியத்தகு ஆரோக்கிய மேம்பாட்டைப் பெற இங்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்
கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான மண்டலத்தின் வழியே குறைந்த நேரத்தில் பயணித்து முடிக்கின்றன, இதனால் வயிறு நிறைந்த உணர்வும் விரைவில் வந்துவிடுகிறது. அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தானது, பல ஆண்டுகளாகச் சேர்ந்த தொந்திக் கொழுப்பைக் குறைப்பதில் நேரடியாகவே உதவுவதாக ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்தானது ஆளி விதைகள், வெண்ணெய், ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிகமுள்ளது. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும். மது அருந்தினால் நல்லதல்ல. அதிகம் மது அருந்துவதற்கும், வயிற்றுப் பகுதியில் சதை கூடுவதற்கும் தொடர்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் மதுவை முற்றிலும் விட்டொழிக்க வேண்டியதில்லை, அருந்தும் அளவைக் குறைத்து சராசரியாகப் பராமரித்தால் போதும்.மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் மன அழுத்தம், கோர்ட்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இதற்கும் இரைப்பையின் கொள்ளளவு அதிகரிப்பதற்கும் தொடர்புள்ளது, இது பசியைத் தூண்டுகிறது. இதே தொடர்பு எதிர்த்திசையிலும் சாத்தியம், அதாவது இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருப்பது உடலில் கோர்ட்டிசால் உற்பத்தியும் அதிகரிக்கிறது. ஆகவே, தொந்திக் கொழுப்பைக் குறைக்க, மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம், அத்துடன் பிற சாதகமான வழிமுறைகளையும் சேர்த்துக் கடைபிடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.
கார்டியோ பயிற்சிகளைச் செய்யுங்கள்
கார்டியோ பயிற்சிகள், அதாவது ஏரோபிக் பயிற்சிகள் கலோரிகளை எரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தவை. உடற்பயிற்சியின் கடினத்தன்மை வேறுபடலாம், ஆனால் உடற்பயிற்சி செய்யும் நேர அளவும் எத்தனை முறை உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற எண்ணிக்கையும் தான், எவ்வளவு தொந்திக் கொழுப்பு குறைகிறது, எவ்வளவு வேகத்தில் குறைகிறது என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சர்க்கரையைத் தவிர்க்கவும்
சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் என்று கருதப்படுகிறது. சர்க்கரையில் பிரக்டோஸ் உள்ளது, இதை கல்லீரலின் மூலம் மட்டுமே வளர்சிதை மாற்றமடையச் செய்ய முடியும். கல்லீரலில் கிளைக்கோஜன் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது, பிரக்டோசை அது கொழுப்பாக மாற்றி, இடுப்புப் பகுதியில் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் பானங்களும் உடல் பருமனுக்குக் காரணமாக உள்ளன.
சிறந்த பலன் கிடைக்க, மேலே கூறப்பட்ட பல்வேறு வழிமுறைகளையும் பின்பற்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றி, உடற்பயிற்சியையும் தவறாமல் செய்துவந்தால் உங்கள் ஆரோக்கிய இலட்சியங்களை எளிதில் அடையலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...