Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை (செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை (செப்.14) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

தமிழகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத அரசுத்தேர்வு சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் உள்பட அனைவரும் சனிக்கிழமை (செப்.16) முதல் இணையதளத்தில் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று நநகஇ உலஅங நஉடபஉஙஆஉத/ஞஇபஞஆஉத 2017 டதஐயஅபஉ இஅசஈஐஈஅபஉ ஏஅகக பஐஇஓஉப ஈஞரசகஞஅஈ என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும்.அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 செய்முறைத் தேர்வு எழுத... : எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வுக்கான 25மதிப்பெண்களில் தேர்ச்சிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண்15-க்கு குறைவாக தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதுடன் எழுத்துத் தேர்வுக்கு வர வேண்டும். செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே செப்.18, 19, 20 ஆகிய மூன்று நாள்களில் அந்தத்தேர்வு நடத்தப்படும்.எனவே, இந்தத் தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரைமேற்கண்ட நாள்களில் அவசியம் தொடர்பு கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive