கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட
கலந்தாய்வின் நிறைவில் காலியாக இருந்த 168 இடங்களும் நிரம்பின.
சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவினரில் 4 இடங்கள், தொழிற்கல்வி படித்தவர்களுக்கான இடங்களில் 3 உள்பட மொத்தம் 168 இடங்கள் காலியாகின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 590 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். 272 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் சிறப்புப் பிரிவினர், தொழிற்கல்வி படித்தோருக்கான இடங்கள் உள்பட அனைத்து இடங்களும் நிரம்பின.
கல்லூரி இடமாற்றம்: இதுதவிர, முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான இடமாற்றக் கலந்தாய்வில் 54 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 51பேருக்கு கல்லூரி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...