இந்த ஆண்டும் தெற்காசிய நாடுகள் கூட்டுறவு அமைப்பான சார்க் மாநாடு நடக்காது
என்பது உறுதியாகி உள்ளது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பகிரங்க ஆதரவு
அளிப்பதை கண்டிக்கும் வகையில் இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய
நாடுகள் கடந்த ஆண்டு சார்க் மாநாட்டை புறக்கணித்தனர். எனவே திட்டமிட்டப்படி
பாகிஸ்தானில் மாநாடு நடக்கவில்லை. அதே நிலைபாடு தொடர்வதால் இந்த ஆண்டு
நேபாளத்தில்
திட்டமிடப்பட்டிருந்த சார்க் மாநாடும் நடக்காது என்பது
உறுதியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது தீவிரவாத ஆதரவை விளக்கிக் கொள்ளும் வரை
சார்க் மாநாடுகள் நடக்காது என்றும் தெரிகிறது.
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். அப்போது சார்க்க அமைப்பு தோல்வி அடைந்துவிட்டதால் இந்தியாவுக்கு அதில் நம்பிக்கையில்லை என்று அவர் கூறிவிட்டாதாக தெரிகிறது. அதற்கு பதிலாக பாகிஸ்தான் தவிர்த்து அனைத்து தெற்காசிய நாடுகளையும் உள்ளடக்கிய புதிய கூட்டுறவு அமைப்பில் இந்தியா கவனம் செலுத்துவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன...

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...