மருத்துவராகும் கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை பெயரும், தனது தந்தை பெயரும் ஒரே
மாதிரியாக இருப்பதால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தனது
தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருந்துள்ளார்.
மருத்துவராகும் கனவோடு வாழ்ந்துகொண்டிருந்த அனிதாவின் ஆசை பறிக்கப்பட்டதால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இருந்து அனிதாவுக்குப் பலரும் ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமியின் தந்தை பெயர் சண்முகம். இறந்த அனிதாவின் தந்தை பெயரும் சண்முகம் என்பதால், சிறுமி தன்னுடைய தந்தையின் பிறந்த நாளை கொண்டாடாமல், அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று (செப் 3) எனது தந்தையின் பிறந்த நாள். இந்த நிலையில் அனிதாவின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தந்தை பெயரும், அனிதாவின் தந்தை பெயரும் சண்முகம் என்பதால், அவருடைய துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிறந்த நாள் கொண்டாடுவதைத் தவிர்த்துள்ளேன்.
இந்தியாவைப் போன்று, அமெரிக்காவிலும் மருத்துவப் படிப்புக்கு எம்கேட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதுபோன்ற, தகுதி தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல அதிகளவில் பணம் தேவைப்படும். இந்த மாதிரியான சூழ்நிலையில் அனிதாவின் தந்தை கூலி வேலை செய்பவர். அவரது மாத வருமானம் 50 டாலர்கள் என்றபோது, எப்படி அவரால் அனிதாவைப் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப முடியும். அதனால், அனிதா மற்ற மாணவர்களைப் போல் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடைசியில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், மனமுடைந்து போன அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவம் இல்லையென்றால் என்ன, வேறு ஏதாவது படிக்கலாம் என நாம் சொல்ல முடியாது. இருப்பினும், இனிவரும் காலங்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பியதைப் படிப்பதற்கேற்ற சூழ்நிலையை இந்தியா அரசு உருவாக்கித் தரும் என நம்புகிறேன்” என சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...