அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள
பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அசல் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்
கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்தால், போலீசில் புகார் அளித்து, தடையின்மை
சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. அதேபோல், விபத்து ஆவணங்கள் பெறுவதிலும்
சிக்கல் நீடித்தது. இதை, மாநில குற்ற ஆவண காப்பகம், தற்போது எளிமைப்படுத்தி
உள்ளது.
அதற்காக, போலீஸ் இணையதளத்தில், 'ஆன் -லைன் சர்வீசஸ்' என்ற பகுதியில், பொதுமக்கள் புகார் அளிக்க, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' மற்றும் விபத்து ஆவணங்கள் பெற, 'டவுன்லோடு ரோடு ஆக்சிடென்ட்' என்ற பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள், தற்போது முதல் வரிசைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'நியூ' என, சிறப்பு நிறத்திலும், அந்த பகுதி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...