Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநிரவல் - மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. 

       தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கவுன்சிலிங், ஆண்டுதோறும், மே மாதம் நடத்தப்படும். 2011-2016 வரை, ஆகஸ்டில் இந்த கவுன்சிலிங் நடந்தது. ஆனால், பள்ளிக்கல்வி செயலராக, உதயசந்திரன் பொறுப்பேற்றதும், மாணவர்கள் நலன் கருதி, மே மாதம் விடுமுறை காலத்திலேயே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், ஆக., ௩௧ல், தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, செப்., ௧ நிலவரப்படி, அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர் விபரங்களை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதில், வகுப்புகள் தோறும் சேர்க்கப்பட்ட மாணவர்கள், வருகை தருவோர், கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆசிரியர் இடங்கள், அவற்றின் காலி இடங்கள், தற்போது பாட வாரியாக, வகுப்பு வாரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகிய விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து தொடக்க, நடுநிலை உயர், மேல்நிலைப் பள்ளிகளில், செப்., 1 நிலவரப்படி, மாணவர் எண்ணிக்கை விபரம் சேகரிக்கப்படுகிறது.
போலியான எண்ணிக்கை இல்லாமல், தில்லுமுல்லுக்கு இடம் தராமல், இந்த விபரங்களையும் தருமாறு, தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நிர்ணயிக்கப்படும்.
இதையடுத்து, விகிதா சாரப்படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், பணிநிரவல் படி, காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றப்படுவர். இதற்கான அறிவிப்பு, அதிகாரபூர்வமாக வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த அறிவிப்பால், தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில், மாணவர்கள் விகிதத்தை விட கூடுதலாக இருக்கும் ஆசிரியர்கள், 'இடம் மாற்றம் வருமோ...' என, பீதியடைந்து உள்ளனர்.




1 Comments:

  1. Enatha nadakum??? Apo August list avanga hand la irukutha??!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive