இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியால் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான இளைஞர்கள் வேலைவாய்ப்புப்
பெறுவார்கள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி குருகிராம் நகரத்தில் நடந்த டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப வசதிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டின் டிஜிட்டல் ரீதியிலான பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
டிஜிட்டல்மயத்தில் தற்போது சைபர் தாக்குதல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு எதிரான சைபர் பாதுகாப்புக் கொள்கையை ஹரியானா இந்தியாவிலேயே முதன்மாநிலமாக அமல்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்தியாவின் எலெக்ட்ரானிக் மற்றும் மொபைல் உற்பத்திக் கூடாரமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் ஹரியானாவுக்கு இருக்கின்றன. இங்குள்ள கிராமங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் இளம் தொழில்முனைவோர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...