வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய மூன்று
நாடுகளுக்கு கூகுள் நிறுவனம் நன்கொடை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்ட மூன்று நாடுகளில் வெள்ளத்தால் 1,60,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 75,000 குடும்பங்களுக்கு டெல்லியைச் சேர்ந்த கூன்ஜ் (எதிரொலி) நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. அதேபோல 'சேவ் தி சில்ரன்' அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, வாழ்விடம், தற்காலிக குடியிருப்புகள் போன்றவை கிடைக்க உதவி வருகிறது. மேலும் சுகாதாரம், நீர்நிலைகள் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த தொண்டு நிறுவனங்களுக்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க இருப்பதாக கூறியுள்ளது. இதை கூகுள் நிறுவனத்தின் ஆசிய துணைத்தலைவர் ராஜன் ஆனந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “வெள்ளத்தைப் பற்றிய அண்மைச் செய்திகளை அறிந்ததாலும், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உள்ளூர் மக்கள் இட்ட பதிவுகளாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து உதவ கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் கூன்ஜ் மற்றும் சேவ் தி சில்ரன் ஆகிய அமைப்புகளுக்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...