வாட்ஸ் அப் கலந்துரையாடலில், எந்த எண்ணுடன் எவ்வளவு மெமரி உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப் பயன்பாட்டின் போது ஒரு குரூப்பில் வந்த குறுச்செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோக்கள் என அனைத்தும் மெமரியை நிரப்பும். இதனால் மெமரியின் மொத்த அளவு நிரம்பும் தருணத்தில், வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் தேவையற்ற தகவல்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.*
*இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.*
*இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள், பிறருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் எந்த அளவு மெமரி நிரம்பியுள்ளது என்பதை கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்து தேவையற்ற குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை எளிதில் நீக்கவோ, தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவோ முடியும். இந்த புதிய வசதியை ப்ளே ஸ்டோரில் சென்று v2.17.340 என்ற வாட்ஸ் அப் மேம்பாட்டை பதிவிறக்கம் செய்து பெறலாம். இத்தகைய வசதி இதற்கு முன் ஐபோன்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...